தூத்துக்குடி
தூத்துக்குடி அருகேகார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி வாலிபர் சாவு
|தூத்துக்குடி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.
தூத்துக்குடி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் வாலிபர் பரிதாபமாக பலியானார்.
திருமண விழாவுக்கு...
தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் துரை. இவருடைய மகன் முத்துமணி (வயது 42). இவர் தனது உறவினர்களான அண்ணா நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் அய்யப்பன் (39), கோமதி அம்மாள் (72), முத்துமணி மனைவி மகாதேவி (32), அவரது மகள் வெஜிலா (8), சுடலைமணி (32) ஆகியோருடன் நெல்லையில் நடந்த திருமண விழாவுக்கு சென்றுவிட்டு தூத்துக்குடிக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். காரை அண்ணாநகரை சேர்ந்த செந்தில்குமார் (39) என்பவர் ஓட்டி வந்தார்.
வாலிபர் சாவு
தூத்துக்குடி வாகைகுளம் அருகே வந்த போது திடீரென நிலை தடுமாறி கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காருக்குள் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை அந்த பகுதி மக்கள் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி அய்யப்பன் பரிதாபமாக இறந்தார். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.