< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி அருகேமூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடி அருகேமூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
18 Oct 2023 12:15 AM IST

தூத்துக்குடி அருகே மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி வழிப்பறி செய்யப்பட்டது.

தூத்துக்குடி அருகே உள்ள போடம்மாள்புரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய மனைவி பாலசுந்தரி (வயது 60). சம்பவத்தன்று இவர், கூட்டாம்புளி-குலையன்கரிசல் ரோட்டில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தாராம். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி, பாலசுந்தரி கழுத்தில் கிடந்த சுமார் 3 பவுன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டாராம்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்