< Back
மாநில செய்திகள்
திருப்பரங்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழைநீர்
மதுரை
மாநில செய்திகள்

திருப்பரங்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழைநீர்

தினத்தந்தி
|
15 Oct 2023 2:29 AM IST

திருப்பரங்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியை மழைநீர் சூழ்ந்தது.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே சாக்கிலிப்பட்டி ஊராட்சி சின்னசாக்கிலிப்பட்டியில் சமீபத்தில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் தேங்கி தெப்பமாக நிற்கிறது. கடந்த 3 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வடியாததால் ஒரு சிலர் வீட்டைவிட்டு வெளியேறி வேலைக்கு செல்ல முடியாமல் தத்தளிக்கின்றனர். இதனையொட்டி சாக்கிலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கமாயன், ஊராட்சி செயலர்(பொறுப்பு) ரவி கிருஷ்ணன் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டனர். திருப்பரங்குன்றம் தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ஜெயக்குமார் தனது கட்சி நிர்வாகிகளுடன் வீட்டை சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தை பார்வையிட்டார். ேமலும் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் கீதாவை தொடர்பு கொண்டு மழை பாதிப்பு குறித்து பேசினார். அப்போது குடியிருப்பு சார்ந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகேட்டுக்கொண்டார். உரிய நடவடிக்கை எடுப்பதாக கீதா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்