< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
தேனி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
|6 Aug 2022 8:40 PM IST
தேனி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்
தேனி அருகே வடபுதுப்பட்டி ஊராட்சி அம்மாபட்டியை சேர்ந்த ஜக்கன் மகன் வீரன் (வயது 27). கம்பி கட்டும் கட்டிட தொழிலாளி. நேற்று இவர், கோடாங்கிபட்டி திருச்செந்தூர் காலனியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கம்பியை மேலே தூக்கும் போது, எதிர்பாராதவிதமாக அந்த வழியாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பியில் பட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி பிரேமா கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.