< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
தேனி அருகே கற்கள் கடத்திய டிராக்டர் பறிமுதல்
|8 July 2022 10:42 PM IST
தேனியில் கற்களை கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது
தேனி அருகே வாழையாத்துப்பட்டி பிரிவு பகுதியில் கனிமவளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் தலைமையில் அதிகாரிகள் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக உடைகற்களை ஏற்றிக் கொண்டு ஒரு டிராக்டர் வந்தது. அதிகாரிகளை பார்த்ததும் டிராக்டரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அந்த டிராக்டரில் அனுமதியின்றி கற்கள் கடத்தி வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உதவி இயக்குனர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் டிராக்டர் உரிமையாளர், டிரைவர் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.