< Back
மாநில செய்திகள்
தேனி அருகே  தோட்டத்தில் மின்வயர்கள் திருட்டு
தேனி
மாநில செய்திகள்

தேனி அருகே தோட்டத்தில் மின்வயர்கள் திருட்டு

தினத்தந்தி
|
9 Oct 2022 10:08 PM IST

தேனி அருகே தோட்டத்தில் மின்வயர்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி அருகே உள்ள சொக்கத்தேவன்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் மாயாண்டி. இவருக்கு சொந்தமான தோட்டம் அதே பகுதியில் உள்ளது. இவர் தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு இருந்த மின் வயர்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோயிருந்தது. இதுகுறித்து அவர் அல்லிநகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தோட்டத்தில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்