< Back
மாநில செய்திகள்
தேனி அருகேகோவில் திருவிழாவில் வாலிபருக்கு கத்திக்குத்து
தேனி
மாநில செய்திகள்

தேனி அருகேகோவில் திருவிழாவில் வாலிபருக்கு கத்திக்குத்து

தினத்தந்தி
|
14 April 2023 12:15 AM IST

தேனி அருகே வாலிபரை கத்தியால் குத்தியவரை போலீசாா் தேடி வருகின்றனர்.

தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. அப்போது அதே ஊரை சேர்ந்த வீர செல்லமுத்து (வயது 19) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு சாவியை தனது நண்பர் சுரேந்திரனிடம் கொடுத்துவிட்டு, போட்டியில் கலந்து கொள்ள சென்றார்.

இதற்கிடையே அதே ஊரைச் சேர்ந்த சுந்தரபாண்டியன், சுரேந்திரனிடம் இருந்த சாவியை பிடுங்கினார். இதுகுறித்து வீர செல்லமுத்துவிடம், சுரேந்திரன் கூறினார். இதையடுத்து சாவியை ஏன் பிடுங்கினாய் என்று சுந்தரபாண்டியனிடம், வீர செல்லமுத்து கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த சுந்தரபாண்டியன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வீர செல்லமுத்துவை குத்தி விட்டு தப்பி ஓடினார். பின்னர் காயமடைந்த வீர செல்லமுத்துவை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து சுந்தரபாண்டியனை தேடி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்