< Back
மாநில செய்திகள்
தேனி அருகே  சிறுமிக்கு பாலியல் தொல்லை
தேனி
மாநில செய்திகள்

தேனி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை

தினத்தந்தி
|
14 Jun 2022 11:24 PM IST

தேனி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குறும்பட இயக்குனரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

தஞ்சாவூரை சேர்ந்தவர் கென்னடி (வயது 47) குறும்பட இயக்குனர். இவர் குறும்படம் எடுப்பதற்காக கடந்த 2018-ம் ஆண்டு தேனி வந்தார். இவர் தற்போது அங்கேயே வசித்து வருகிறார். இந்நிலையில் கணவர், 16 வயது மகளுடன் வசித்து வந்த 34 வயது பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த சிறுமிக்கு கென்னடி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சிறுமியை அவர்கள் மிரட்டியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு அந்த சிறுமி சென்றார். அங்கு சிறுமி கவலையுடன் இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது சித்தி விசாரித்தார். அப்போது சிறுமி நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து அவர் தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுமியின் தாயை கைது செய்தனர். கென்னடியை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்