தேனி
தேனி அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட்ட பனை மரங்கள்
|தேனி அருேக சாலை விரிவாக்கப் பணிக்காக பனை மரங்கள் வெட்டப்படுகின்றன
தேனியில் இருந்து மதுரை செல்லும் சாலையானது, கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது க.விலக்கில் இருந்து தேனி வரை சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்காக சாலையோரம் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் க.விலக்கு-அரப்படித்தேவன்பட்டி இடையே இருந்த ஏராளமான பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. வெட்டப்பட்ட பனை மரங்கள் சாலையோரம் துண்டு, துண்டுகளாக கிடக்கின்றன. அந்த வழியாக கடந்து சென்ற மக்கள் இந்த காட்சிகளை வேதனையுடன் பார்த்துச் சென்றனர். சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மரங்கள் வெட்டப்படும் அதே நேரத்தில், சாலைப் பணிகள் நடக்கும் போதே சாலையோரம் புதிய மரங்களை நட்டு பராமரிக்கவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.