தேனி
தேனி அருகே 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை: பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்
|தேனி அருகே 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி அருகே பத்ரகாளிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் அன்பரசன் (13). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்ததால் அவருடைய பெற்றோர் கண்டித்து பள்ளிக்கு அனுப்பி வந்தனர். இன்று அன்பரசனை அவருடைய தாய், பள்ளிக்கு செல்லுமாறு கண்டித்து விட்டு அருகில் இருந்த உறவினர் வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்த போது அன்பரசன் வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே உறவினர்கள் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.