< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
தேனி அருகே பல்பொருள் அங்காடியில் திருட முயற்சி
|23 July 2022 9:39 PM IST
தேனி அருகே பல்பொருள் அங்காடியில் திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
தேனி அருகே மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்த மாயாண்டி மகன் மதன்குமார் (வயது 23). இவர் பழனிசெட்டிபட்டியில் இருந்து மாரியம்மன் கோவில்பட்டி செல்லும் சாலையில் பல்பொருள் விற்பனை அங்காடி வைத்துள்ளார். கடந்த 21-ந்தேதி இரவு இந்த கடையை பூட்டிவிட்டு அவர் சென்று விட்டார்.
இந்நிலையில் மர்ம நபர்கள் இந்த கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து, கல்லாபெட்டியையும் உடைத்து திருட முயற்சி செய்தனர். ஆனால் அதில் பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் மதன்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.