< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
தட்டார்மடம் அருகே தாய், மகன் மீது தாக்குதல்
|8 July 2023 12:15 AM IST
தட்டார்மடம் அருகே தாய், மகன் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள முதலூர் புதூரைச் சேர்ந்த டால்பர்ட் மகன் ஆரோன். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் திரவியராஜ் (34). இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்கள் ஒன்றாக கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறை தொடர்ந்து முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று திரவியராஜ், அவரது தம்பி தாவீது (30) ஆகியோர் ஆரோன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இருந்த ஆரோனையும், அவரது தாயார் அன்புராணியையும் (50) தடியால் தாக்கியதுடன் கொலைமிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த அன்புராணி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகம்மது ரபீக் வழக்கு பதிவு செய்து தாவீது, திரவிய ராஜ் ஆகியோரை கைது செய்தார்.