தூத்துக்குடி
தட்டார்மடம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் இளம்பெண் படுகாயம்
|தட்டார்மடம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் இளம்பெண் படுகாயம் அடைந்தார்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள அதிசயபுரம் கோவில் தெருவை சேர்ந்த ஜேசுராஜ் மகள் மெர்லின் சுவேதா (வயது 23). இவர் திசையன்விளையில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர், சம்பவத்தன்று இரவு கடையில் வேலை முடிந்து திசையன்விளையில் இருந்து பஸ்சில் அதிசயபுரம் பஸ்நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அங்கிருந்து வீட்டிற்கு செல்ல முயன்றபோது, புத்தன்தருவை தர்மராஜ் மகன் தினேஷ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மெர்லின் சுவேதா படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், அவர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.