< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
தாளவாடி அருகே சூறாவளிக்காற்றுடன் மழை 300 வாழைகள் முறிந்து விழுந்தன
|28 March 2023 2:29 AM IST
முறிந்து விழுந்தன
தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வந்தது. மேலும் அனல் காற்று வீசியது. இதனால் மழை பெய்யாதா என பொதுமக்கள் ஏங்கி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் தாளவாடி, தொட்டகாஜனூர், ராமாபுரம், ஓசூர், திகனாரை, தர்மாபுரம் ஆகிய பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் சாரல் மழை பெய்தது. சூறாவளிக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கிருஷ்ணாபுரம் பகுதியில் 300 வாழை மரங்கள் காற்றில் முறிந்து சேதம் ஆனது.