< Back
மாநில செய்திகள்
தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் தென்னங்கன்றுகள் சேதம்
ஈரோடு
மாநில செய்திகள்

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் தென்னங்கன்றுகள் சேதம்

தினத்தந்தி
|
25 Aug 2023 9:56 PM GMT

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் தென்னங்கன்றுகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.

தாளவாடி

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் தென்னங்கன்றுகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.

தென்னங்கன்றுகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வனப்பகுதியைவிட்டு வெளியேறி விடுகின்றன. அவ்வாறு வெளியேறும் யானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களையும் நாசம் செய்கின்றன.

ஜீர்கள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட அருள்வாடி பகுதியை சேர்ந்தவர் பங்கஜப்பா. விவசாயி. 2 ஏக்கரில் தென்னங்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறார்.

2 யானைகள்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 யானைகள் பங்கஜப்பாவின் தோட்டத்துக்குள் நுழைந்தன. பின்னர் தென்னங்கன்றுகளை மிதித்து சேதப்படுத்தின. சத்தம் கேட்டு தோட்டத்து வீட்டில் தங்கியிருந்த பங்கஜப்பா வெளியே ஓடிவந்து பார்த்தார்.

பின்னர் யானைகள் தென்னங்கன்றுகளை நாசப்படுத்துவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்து விவசாயிகளை உதவிக்கு அழைத்தார்.

தென்னங்கன்றுகள் சேதம்

அதன்பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து தீப்பந்தம் காட்டியும், பட்டாசு வெடித்தும் 3 மணி நேரம் போராடி யானைகளை காட்டுக்குள் விரட்டினர். யானைகள் தோட்டத்துக்குள் புகுந்ததில் 30 தென்னங்கன்றுகள் சேதமடைந்தன. யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாத வகையில் தேவைப்படும் இடங்களில் அகழி அமைக்கவேண்டும் என்று விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்