< Back
மாநில செய்திகள்
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
ஈரோடு
மாநில செய்திகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

தினத்தந்தி
|
12 March 2023 8:59 PM GMT

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் அங்கு பயிரிடப்பட்டிருந்த பாக்கு மரம் மற்றும் கரும்பு பயிர் சேதம் ஆனது.

தாளவாடி

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் அங்கு பயிரிடப்பட்டிருந்த பாக்கு மரம் மற்றும் கரும்பு பயிர் சேதம் ஆனது.

விவசாய நிலங்களுக்குள்...

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஜீர்கள்ளி, ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இதில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள கரும்பு, வாழை, மக்காச்சோளம், ராகி, தென்னை போன்றவற்றை தின்றும், மிதித்தும் சேதப்படுத்துகின்றன. இதுபோன்ற சம்பவம் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் நடந்து உள்ளது.

7 யானைகள்

ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட தாளவாடி அருகே உள்ள ஜோரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 40). விவசாயி. இவர் தனது 3 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு மற்றும் பாக்கு மரத்தை பயிரிட்டு உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து 7 காட்டு யானைகள் வெளியேறி தாமோதரனின் தோட்டத்துக்குள் புகுந்து பாக்கு மரத்தை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது. பின்னர் கரும்பு தோட்டத்தில் புகுந்தன. பின்னர் அந்த யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த கரும்பை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தின. மேலும் அங்கிருந்த பாக்கு மரத்தையும் முட்டி தள்ளின. அப்போது யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு, தோட்டத்து வீ்ட்டில் தூங்கி கொண்டிருந்த தாமோதரன், அதிர்ச்சி அடைந்து தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்தார்.

பாக்கு மரம்- கரும்பு சேதம்

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஜீர்கள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாயிகளுடன் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 6 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் 7 யானைகளும் வனப்பகுதிக்குள் சென்றன. தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் 40-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களும், 1 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்களும் சேதம் ஆனது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 'வனப்பகுதியில் இருந்து விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்துவிடாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளால் சேதப்படுத்த பயிா்களுக்கு உண்டான இழப்பீட்டு தொைகயை உரிய விவசாயிகளுக்கு வழங்க வனத்துறையினர் உயிர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

மேலும் செய்திகள்