< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
தாளவாடி அருகேகர்நாடக மாநில மதுபாக்கெட் விற்றவர் கைது
|17 Oct 2023 2:34 AM IST
தாளவாடி அருகே கர்நாடக மாநில மதுபாக்கெட் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.
தாளவாடியை அடுத்த சிக்கள்ளி பகுதியில் தாளவாடி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே அவரை போலீசார் விரட்டி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், 'அவர் சிக்கள்ளி கிராமத்தை சேர்ந்த சையத் இப்ராஹிம் (வயது 70) என்பதும், அவர் கர்நாடகா மாநில மதுபாக்கெட்டை விற்றதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சையத் இப்ராஹிமை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 11 கர்நாடக மாநில மதுபாக்கெட்டையும் பறிமுதல் செய்தனர்.