< Back
மாநில செய்திகள்
தாளவாடி அருகே  சாலையில் முறிந்து விழுந்த மரம்  போக்குவரத்து துண்டிப்பு
ஈரோடு
மாநில செய்திகள்

தாளவாடி அருகே சாலையில் முறிந்து விழுந்த மரம் போக்குவரத்து துண்டிப்பு

தினத்தந்தி
|
7 July 2023 4:08 AM IST

தாளவாடி அருகே சாலையில் முறிந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தாளவாடி

தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்துவருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவும் காற்றுடன் மிதமான மழை பெய்தது. நேற்று தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் சிக்கள்ளி ஆற்று பாலம் அருகே சாலையோரத்தில் இருந்த மூங்கில் மரம் சாலையில் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த வழியாக செல்லும் கார், பஸ், வேன், லாரி போன்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. இதனால் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள், விவசாயிகள் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இதன்காரணமாக அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்