சிவகாசி அருகே மூ.மு. க. நிர்வாகி சாலை விபத்தில் பலி
|சிவகாசி - நாரணாபுரம் சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது பேட்டரி வாகனம் மோதி பாலமுருகன் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
சிவகாசி,
சிவகாசி அருகே பள்ளப்பட்டி ரோட்டில் உள்ள முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது45). இவர் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளராக இருந்தார். நேற்று மாலை சிவகாசி - நாரணாபுரம் சாலையில் தனது மோட்டார் சைக்களில் பாலமுருகன் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற பேட்டரி வாகனத்தில் மோதி நிலை தடுமாறி பாலமுருகன் கீழே விழுந்தார்.
இந்த விபத்தில் பேட்டரி வாகனத்தை ஓட்டி வந்த நாரணாபுரம் காலனியைச் சேர்ந்த பால்ராஜ் (69) என்பவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த பாலமுருகனை மீட்டு மதுரை வேலம்மாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .