< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
சிவகிரி அரசு பள்ளி அருகில் கார் தீப்பிடித்து எரிந்தது
|25 Aug 2022 3:08 AM IST
சிவகிரி அரசு பள்ளி அருகில் கார் தீப்பிடித்து எரிந்தது.
சிவகிரி
சிவகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பட்டேல் தெருவை சேர்ந்தவர் மெய்யப்பன் (வயது 48). கார் டிரைவர். நேற்று மாலை 4 மணியளவில் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் தன் மகன் ஹரிஹரனை அழைத்து வர காரில் சென்றார். அங்கு சென்றதும் பள்ளியின் அருகே காரை நிறுத்தி விட்டு ஹரிஹரனை அழைத்து வந்தார். பின்னர் காரில் ஏரி இயக்கினார். அப்போது என்ஜினில் இருந்து கரும்புகை வந்தது. உடனே மகனை காரில் இருந்து இறக்கினார். அதற்குள் காரில் தீப்பற்றி எரிந்தது. பொதுமக்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றார்கள். அப்போது அந்த வழியாக வந்த பழனிசாமி என்பவர் தண்ணீர் வேனை கொண்டு வந்து காரின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். எனினும் கார் எரிந்து நாசம் ஆனது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.