< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
சாத்தான்குளம் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
|15 July 2023 12:15 AM IST
சாத்தான்குளம் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்து போனார்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள முதலூர் 4-வது தெருவைச் சேர்ந்த சங்கரசுப்பு மகன் பாலசுப்பிரமணியன் (வயது 47). தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு மது குடிபழக்கம் இருந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.