< Back
மாநில செய்திகள்
சாத்தான்குளம் அருகேகோவில் கொடை விழாவில் கும்பல் தாக்குதல்; 2பேர் படுகாயம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

சாத்தான்குளம் அருகேகோவில் கொடை விழாவில் கும்பல் தாக்குதல்; 2பேர் படுகாயம்

தினத்தந்தி
|
25 Aug 2023 12:15 AM IST

சாத்தான்குளம் அருகே கோவில் கொடை விழாவில் கும்பல் தாக்கியதில் 2பேர் படுகாயம் அடைந்தனர்.

தட்டார்மடம்:

ஆழ்வார்திருநகரி நவலட்சுமிபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் அன்னமகாராஜா (வயது 23). இவர், சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான சாத்தான்குளம் அருகே கீழ புளியங்குளம் சுடலைமாடசுவாமி கோவில் கொடை விழாவிற்கு சென்றார். அப்போது அவரது உறவினர் திரவியம் மகன் சக்திவேல் (40) என்பவர் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்துள்ளார். அவருடன் அன்னமகாராஜாவும் சென்றார். அவரை இளமால்குளம் சுப்பிரமணியன் மகன் முருகன் (41) என்பவர் வழிமறித்து அவதூறாக பேசி தகராறு செய்தார். இந்த தகராறு முற்றியதில் முருகன், ஐயம்பெருமாள் மகன் பாலசுப்பிரமணி, நெல்லை தச்சநல்லூர் துரை மகன் சுந்தர் சிங், புளியங்குளம் ராமசாமி மகன் கோவிந்தராஜ், புளியங்குளம் கணபதி மகன் அன்னபழம் (41) ஆகியோர் அடங்கிய கும்பல் சக்திவேல், அன்னமகாராஜாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குபதிவு செய்து முருகன், அன்னபழம் ஆகியோரை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள பாலசுப்பிரமணி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்