< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
சாத்தான்குளம் அருகே மாணவியை கடத்திய வாலிபர்போக்சோ சட்டத்தில் கைது
|9 Oct 2023 12:15 AM IST
சாத்தான்குளம் அருகே மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே தாமரைமொழி வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் சுப்பிரமணியன் (வயது 20). இவர், 10-ம் வகுப்பு பயிலும் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தார்.