< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை அருகே பூட்டிய வீட்டில் நகைகள் திருட்டு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

புதுக்கோட்டை அருகே பூட்டிய வீட்டில் நகைகள் திருட்டு

தினத்தந்தி
|
16 Jun 2023 12:15 AM IST

புதுக்கோட்டை அருகே பூட்டிய வீட்டில் நகைகள் திருடிய மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள கீழகூட்டுடன்காட்டை சேர்ந்தவர் மகேஷ். இவருடைய மனைவி திவ்யா (வயது 31). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றுள்ளார்.. மீண்டும் அவர் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் முன்பக்க கிரில் கேட் மற்றும் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யா வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோவில் இருந்த ரூ.43 ஆயிரத்து 125 மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்று இருப்பது தெரிய வந்தது இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்