< Back
மாநில செய்திகள்
கம்பம் அருகே  ஊராட்சி அலுவலக பூட்டு உடைப்பு
தேனி
மாநில செய்திகள்

கம்பம் அருகே ஊராட்சி அலுவலக பூட்டு உடைப்பு

தினத்தந்தி
|
11 Dec 2022 12:15 AM IST

கம்பம் அருகே ஊராட்சி அலுவலக பூட்டு உடைக்கப்பட்டது.

கம்பம் ஒன்றியத்தில் சுருளிப்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி தலைவராக நாகமணி வெங்கடேசன் உள்ளார். இந்நிலையில் தலைவர் நாகமணி வெங்கடேசன் நிர்வாகத்தில் முறைகேடு, கணவர் தலையீடு உள்ளது என 11 வார்டு கவுன்சிலர்களும் தமிழக முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்களை அனுப்பினர்.

இதற்கிடையே கடந்த 1-ந்தேதி ஊராட்சி செயலர் ஈஸ்வரனை அலுவலகத்தில் கவுன்சிலர்கள் பூட்டி சிறை வைத்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை வெளியே மீட்டு கொண்டு வந்து மீண்டும் அலுவலகத்தை பூட்டி சென்றனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கோதண்டபாணி, ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிப்பட்டி ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அவர் அலுவலக கதவின் பூட்டை உடைத்தார். இதையடுத்து புதிய பூட்டு வாங்கப்பட்டு ஊராட்சி செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்