< Back
மாநில செய்திகள்
கம்பம் அருகே  சேதமடைந்த வனத்துறை குடியிருப்பை இடித்து அகற்ற வேண்டும்:  பொதுமக்கள் கோரிக்கை
தேனி
மாநில செய்திகள்

கம்பம் அருகே சேதமடைந்த வனத்துறை குடியிருப்பை இடித்து அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
18 Sept 2022 8:23 PM IST

கம்பம் அருகே சேதமடைந்த வனத்துறை குடியிருப்பை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்

கம்பம் கிழக்கு வனச்சரகத்திற்குட்பட்ட நாராயணத்தேவன்பட்டியில் வன ஊழியர்களுக்கு கடந்த 50 வருடங்களுக்கு முன்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. இந்த கட்டிடம் பராமரிப்பின்றி சேதமடைந்தது. இதனால் அதன் அருகிலேயே புதிதாக குடியிருப்புகள் கட்டப்பட்டன. அதில் வன ஊழியர்கள் குடியிருந்து வருகின்றனர். ஆனால் பழைய கட்டிடம் பயன்பாடின்றி பாலடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தை சுற்றி முட்புதர்கள், செடி, கொடிகள் ஆக்கிரமித்து புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் மதுபான பார், சீட்டு விளையாடும் இடமாக மாறியுள்ளது. கட்டிம் அருேக சிறுவர்கள் விளையாடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை குடியிருப்பை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்