< Back
மாநில செய்திகள்
கம்பம் அருகேகுண்டும், குழியுமாக மாறிய சாலை:சீரமைக்க வலியுறுத்தல்
தேனி
மாநில செய்திகள்

கம்பம் அருகேகுண்டும், குழியுமாக மாறிய சாலை:சீரமைக்க வலியுறுத்தல்

தினத்தந்தி
|
20 May 2023 12:15 AM IST

கம்பம் அருகே குண்டும், குழியுமாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்பம் ஒன்றியம் ஆங்கூர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மஞ்சள்குளம் கிராமம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்ல பஸ் வசதி கிடையாது. இதனால் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்களில் கம்பம் நகருக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கம்பத்தில் இருந்து மஞ்சள்குளம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் இந்த பள்ளங்கள் தெரியாமல் மோட்டார் சைக்கிளில் செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்