< Back
மாநில செய்திகள்
பெரியகுளம் அருகே  கும்பக்கரை அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
தேனி
மாநில செய்திகள்

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
17 Sept 2022 12:30 AM IST

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

பெரியகுளம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து சீராக வந்தது. இதனால் அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்