< Back
மாநில செய்திகள்
பெரியகுளம் அருகேசாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்:அதிகாரிகள் ஆய்வு
தேனி
மாநில செய்திகள்

பெரியகுளம் அருகேசாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்:அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
21 April 2023 12:15 AM IST

பெரியகுளம் அருகே சாலையில் தேங்கி நின்ற கழிவுநீரை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஊராட்சியில் தேனி சாலை அருகே கடந்த சில நாட்களாக கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி தலைவர் ஜெயமணி சந்திரன் நெடுஞ்சாலை துறையினரிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் ஊராட்சி தலைவர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கழிவுநீர் தேங்கி நிற்கும் இடத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கழிவுநீர் நீண்ட நாட்களாக தேங்கி இருப்பதால் புழுக்கள் உற்பத்தியாகி சாலையில் செல்கிறது. எனவே கழிவுநீர் வாய்க்காலை சீரமைத்து தருமாறு நெடுஞ்சாலைத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

Related Tags :
மேலும் செய்திகள்