< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பெரியகுளம் அருகே விவசாயி வீட்டில் திருட்டு
|3 Oct 2022 8:55 PM IST
பெரியகுளம் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருடுபோனது.
பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ரவி. விவசாயி. இவரது மனைவி வாசுகி. இவர்கள் பெரியகுளம் அருகே உள்ள முருகமலை நகரில் புதிதாக வீடு கட்டியுள்ளனர். இந்த வீட்டில் வசித்து வந்த அவர்கள் நேற்று லட்சுமிபுரத்திற்கு வந்தனர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அதில் பீரோவில் இருந்த சுமார் 4 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருடு போயிருந்தது. இதுகுறித்து வாசுகி தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.