< Back
மாநில செய்திகள்
பெரியகுளம் அருகே 1 கோடியில் சாலை அமைக்கும் பணி: அதிகாரிகள் ஆய்வு
தேனி
மாநில செய்திகள்

பெரியகுளம் அருகே 1 கோடியில் சாலை அமைக்கும் பணி: அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
23 March 2023 12:15 AM IST

பெரியகுளம் அருகே ரூ.1 கோடியில் சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நெடுஞ்சாலை துறை சார்பில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் பெரியகுளம் அருகே சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதையடுத்து வடுகப்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இருந்து தேசிய நெடுஞ்சாலை பிரிவு வரை சுமார் 2.4 கிலோ மீட்டர் தூரம் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நஸ்ரின், உதவி பொறியாளர் அனுசுயா, திறன்மிகு உதவியாளர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Related Tags :
மேலும் செய்திகள்