< Back
மாநில செய்திகள்
பெண்ணாடம் அருகேபுகையிலை பொருட்கள் விற்றவர் கைது
கடலூர்
மாநில செய்திகள்

பெண்ணாடம் அருகேபுகையிலை பொருட்கள் விற்றவர் கைது

தினத்தந்தி
|
25 Dec 2022 12:15 AM IST

பெண்ணாடம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்,

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே நரசிங்கமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி மற்றும் போலீசார் நரசிங்கமங்கலம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையை சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக 2½ கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளரான அரிகேரி கிராமத்தை சேர்ந்த தனக்கோடி மகன் சங்கர் (வயது 40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்