< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
ஓட்டப்பிடாரம் அருகே எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.50 ஆயிரம் திருட்டு
|1 July 2023 12:15 AM IST
ஓட்டப்பிடாரம் அருகே எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே கே.சண்முகபுரம் தெற்கு தெருவை சேர்ந்த காமாட்சி மகன் நாகராஜ் (வயது 33). இவர் குறுக்குசாலையில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு நாகராஜ் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் காலையில் கடையை திறந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு, உள்ளே இருந்த பணப்பெட்டியும் திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பணப்பெட்டியில் இருந்த ரூ.50 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.