< Back
மாநில செய்திகள்
ஓட்டப்பிடராம் அருகே டிராக்டர் கலப்பையை திருடியவர் கைது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

ஓட்டப்பிடராம் அருகே டிராக்டர் கலப்பையை திருடியவர் கைது

தினத்தந்தி
|
21 Jun 2023 12:15 AM IST

ஓட்டப்பிடராம் அருகே டிராக்டர் கலப்பையை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

ஓட்டப்பிடராம்:

எப்போதும் வென்றான் அருகே உள்ள எல்லையம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் முருகன் (வயது 73). விவசாயி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வயலில் உழவுப்பணியை முடித்து விட்டு டிராக்டர் எந்திரத்தை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது டிராக்டரில் இருந்த கலப்பை திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்முருகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில், விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையாபுரத்தை சேர்ந்த நீலகண்டன் மகன் முனியசாமி (58) என்பவர் அந்த கலப்பையை திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்த டிராக்டர் கலப்பையை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்