தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தில் மறுசீரமைப்பு பணி
|ஓட்டப்பிடாரம் அருகே எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தில் மறுசீரமைப்பு பணி தொடங்கியது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடராம் அருகே எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தில் ரூ.5.60 கோடி திட்ட மதிப்பீட்டில் நீர்வள ஆதாரத்துறை சார்பில் மறுசீரமைப்பு பணிகள் நேற்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு கோரம்பள்ளம் ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி தலைமை தாங்கினார். யூனியன் துணைத் தலைவர் காசிவிஸ்வநாதன், உதவி செயற்பொறியாளர் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ நீர்தேக்கம் மறுசீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் உருவாட்டி, வடக்கு மாவட்ட தி.மு.க.இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ், நீர்வள துறை பாசன விவசாயிகள் சங்க தலைவர் குமாரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.