< Back
மாநில செய்திகள்
ஓட்டப்பிடாரம் அருகே போதைப் பொருள் ஒழிப்பு  விழிப்புணர்வு ஊர்வலம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

ஓட்டப்பிடாரம் அருகே போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
27 Jun 2023 12:15 AM IST

ஓட்டப்பிடாரம் அருகே போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள உள்ள நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பசுவந்தனையில் நடந்தது. கல்லூரி முதல்வர் பீட்டர் அமலதாஸ் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை பசுவந்தனை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக ஊரின் முக்கிய வீதி வழியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். ஊர்வளத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மார்த்தாண்ட பூபதி, பசுவந்தனை பஞ்சாயத்து தலைவர் லட்சுமி சிதம்பரம், தமிழ்த்துறைத்தலைவர் சேதுராமன், வணிகவியல் துறைத்தலைவர் வினோத், கணிதவியல்துறைத்தலைவர் செல்வி, உடற்கல்வி இயக்குனர் கணேசன் மற்றும் பேராசிரியர்கள் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்