< Back
மாநில செய்திகள்
ஊஞ்சலூர் அருகேபெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஈரோடு
மாநில செய்திகள்

ஊஞ்சலூர் அருகேபெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
21 July 2023 1:54 AM IST

ஊஞ்சலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்

ஊஞ்சலூர் அருகே உள்ள கொந்தளம் மாரியம்மன் கோவில் தோட்டத்தில் வசித்து வந்தவர் பத்மாவதி (வயது 48). இவருடைய தங்கை தனலட்சுமி (37). இவர் அறச்சலூர் அருகே உள்ள குமாரபாளையத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனலட்சுமிக்கு பத்மாவதியும், அவரது கணவரும் ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தை கேட்டபோது அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த பத்மாவதி நேற்று முன்தினம் இரவு யாரும் இல்லாதபோது வீட்டின் இரும்பு விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தொங்கினார். இந்த நிலையில் ஈரோட்டுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய அவரது கணவர் இதைபார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே பத்மாவதியை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு பத்மாவதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்