< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
ஊஞ்சலூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்
|10 Oct 2023 5:19 AM IST
ஊஞ்சலூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் அருகே உள்ள பனப்பாளையத்தில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிமிப்பு செய்திருந்தார். இதுகுறித்து கொடுமுடி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தநிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கொடுமுடி தாசில்தார் பாலகுமார், நில வருவாய் ஆய்வாளர் சங்கீதா, ஊஞ்சலூர் கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் (பொறுப்பு) ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.