< Back
மாநில செய்திகள்
நம்பியூர் அருகே   வடமாநில பெண் தற்கொலை
ஈரோடு
மாநில செய்திகள்

நம்பியூர் அருகே வடமாநில பெண் தற்கொலை

தினத்தந்தி
|
2 Nov 2022 1:33 AM IST

நம்பியூர் அருகே

ராஜஸ்தான் மாநிலம் நாடோடி காரளி என்ற இடத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மனைவி கிருஷ்ணா (வயது 27). மகள்கள் தனுஷா(6), ஹரிஷா (4), அபி (2).

சதீஷ்குமாரும், கிருஷ்ணாவும் குழந்தைகளுடன் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கோட்டுபுள்ளாம்பாளையம் காமராஜர் நகர் பகுதியில் தங்கிக்கொண்டு கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்று வந்தார்கள்.

இந்தநிலையில் கடந்த சில கிருஷ்ணா உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கிருஷ்ணா நேற்று மதியம் தான் தங்கியிருந்த வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்