< Back
மாநில செய்திகள்
முள்ளக்காடு அருகேவாலிபரை வெட்டிய2 பேர் கைது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

முள்ளக்காடு அருகேவாலிபரை வெட்டிய2 பேர் கைது

தினத்தந்தி
|
5 Aug 2023 12:15 AM IST

முள்ளக்காடு அருகே வாலிபரை வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு தேவி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் கணேசன் (51) கூலித் தொழிலாளி.இவரது மகன் மகேஷ் குமார் (வயது 22) இதில் கணேசனுக்கு 4மகன்கள் உள்ளனர். அதில் 2பேருக்கு திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர். மகேஷ் குமார் மற்றும் அஜித் குமார் ஆகிய 2 பேரும் கணேசனுடன் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலையில் முள்ளக்காடு முனியசாமி நகர் கோவில் பாலம் அருகில் மகேஷ் குமார் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சின்னராஜ்(28), முகேஷ், முத்துராஜ்(23) ஆகியோர் மகேஷ் குமாரை வழிமறித்து அவதூறாக பேசி உள்ளனர். இதை கண்டித்த மகேஷ்குமாரை 3 பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் மகேஷ் குமார் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, முள்ளக்காட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ேசர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து முத்துராஜ், சின்னராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முகேசை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்