தூத்துக்குடி
மெஞ்ஞானபுரம் அருகே வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
|மெஞ்ஞானபுரம் அருகே வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வியாபாரி
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சத்தியாநகர் கொடிமரத் தெருவைச் சேர்ந்த ஹாலோவிதின் மகன் மைதீன்பிச்சை (வயது 43). வியாபாரி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக தகாத உறவு இருந்துள்ளது. இதை மைதீன் பிச்சை மனைவி ஜன்னத் (38) பலமுறை கண்டித்தும், அவர் அந்த பெண்ணுடனான உறவை துண்டித்து கொள்ளவில்லையாம்.
இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சிலநாட்களுக்கு முன்பு இப்பிரச்சினை குறித்து ஏற்பட்ட வாய்த்தகாராறின் போது, அந்த பெண்ணுடன் உள்ள உறவை துண்டித்துகொள்ளுமாறு அவரை மனைவி கண்டித்துள்ளார்.
விஷம் குடித்தார்
இதில் மனமுடைந்து காணப்பட்ட மைதீன்பிச்சை நேற்று முன்தினம் காலையில் சந்தியா நகர் முத்து தோட்டத்துக்கு அருகேயுள்ள தண்ணீர் தொட்டி பகுதியில் விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜன்னத் கணவரை மீட்டு மெஞ்ஞானபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மைதீன்பிச்சை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
போலீசார் விசாரணை
இது குறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் விரைந்து சென்று, அவரை உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.