< Back
மாநில செய்திகள்
மயிலாடும்பாறை அருகேசாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தம்:வாகன ஓட்டிகள் அவதி
தேனி
மாநில செய்திகள்

மயிலாடும்பாறை அருகேசாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தம்:வாகன ஓட்டிகள் அவதி

தினத்தந்தி
|
20 Sept 2023 12:15 AM IST

மயிலாடும்பாறை அருகே சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை கிராமத்தில் வீருசின்னம்மாள் கோவிலில் இருந்து அரசு தொடக்கப்பள்ளி வரையிலான தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இதனால் மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகன விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது. எனவே புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து வீருசின்னம்மாள் கோவிலில் இருந்து அரசு தொடக்கப்பள்ளி வரை புதிய தார் சாலை அமைக்க அரசு உத்தரவிட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து கடந்த மாதம் புதிய தார்சாலை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தார் சாலையில் கற்கள் பரப்பி வைக்கப்பட்டது. அதன் பின்னர் திடீரென பணிகள் நிறுத்தப்பட்டது. 2 வாரத்திற்கு மேல் ஆகியும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் கற்கள் பரப்பி வைக்கப்பட்ட சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் பெரிய அளவிலான விபத்து ஏற்படும் முன்பு சாலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்