< Back
மாநில செய்திகள்
கோவில்பட்டி அருகேஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கோவில்பட்டி அருகேஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

தினத்தந்தி
|
28 Aug 2023 12:15 AM IST

கோவில்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள கரிசல்குளம் வடக்கு தெருவை சேர்ந்த மூக்கையா மகன் ரவி (வயது 44). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். கரிசல்குளம் அரவை ஆலை அருகே சென்ற போது திடீரென நிலைகுலைந்த சாலை ஓரத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ரவி பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத் தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்