< Back
மாநில செய்திகள்
கோவில்பட்டி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கோவில்பட்டி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

தினத்தந்தி
|
13 Oct 2023 12:15 AM IST

கோவில்பட்டி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி அருகிளுள்ள இனாம் மணியாச்சி நடுத்தெருவை சேர்ந்தவர் சோலைச்சாமி (வயது 53). இவரது மனைவி கனகலட்சுமி ( 47). இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், காளியம்மன் கோவில் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹரி கண்ணன், செந்தில், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்