< Back
மாநில செய்திகள்
கோவில்பட்டி அருகே  காலிக் குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கோவில்பட்டி அருகே காலிக் குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
11 Oct 2023 12:15 AM IST

கோவில்பட்டி அருகே காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு கங்கன்குளம் கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கபட்டு வந்தது. தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும், நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் இருந்த போதும் அதை திறந்து விட பஞ்சாயத்து நிர்வாகம் மறுப்பதாகவும், இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நேற்று அக்கிராம பெண்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறிதுநேரம் கோஷம் எழுப்பிவிட்டு அனைவரும் கலைந்து ெசன்றனர்.

மேலும் செய்திகள்