மதுரை
கொட்டாம்பட்டி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு- 7 பேர் காயம்
|கொட்டாம்பட்டி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
கொட்டாம்பட்டி,
வடமாடு மஞ்சுவிரட்டு
கொட்டாம்பட்டி அருகே உள்ள தேத்தாம்பட்டியில் உள்ள அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டும் கிராம மக்கள் மற்றும் மாடுபிடி வீரர் பன்னீர் ராஜா நினைவு குழு சார்பில் வடமாடுமஞ்சுவிரட்டு நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்யப்பட்ட, மதுரை சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
களமிறக்கப்படும் காளையை 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் 25 நிமிடங்களுக்குள் அடக்கினால் மாடுபிடி வீரர்கள் வெற்றியாகவும், இல்லையென்றால் காளை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். இதுவே வடமாடு மஞ்சுவிரட்டுவின் விதிமுறையாகும்.
7 போ் காயம்
முன்னதாக மஞ்சுவிரட்டில் பங்கேற்ற காளைகளுக்கு மரியாதை செய்து அவிழ்த்துவிடப்பட்டன. இதனை காண மதுரை, சிவகங்கை மாவட்டத்திலிருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர். இதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
சிறந்த காளைக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சைக்கிள், அண்டா, பீரோ, குத்துவிளக்கு, வெள்ளிக்காசு, ரொக்கப்பணம் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.