< Back
மாநில செய்திகள்
காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம்
நீலகிரி
மாநில செய்திகள்

காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம்

தினத்தந்தி
|
12 Aug 2023 12:15 AM IST

காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம் அடைந்தார்.

கோத்தகிரி: கோத்தகிரி அருகே அரக்கோடு கிராமம் பங்களாபடிகை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 68). இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இருளர் பழங்குடியின விவசாயியான இவர், நேற்று மாலை சுமார் 3 மணிக்கு கொக்கோடு எஸ்டேட் பகுதிக்கு பலாப்பழம் பறிக்க சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள புதர் மறைவில் இருந்து திடீரென வெளியே வந்த காட்டு யானை ஒன்று செல்வராஜை துரத்தியது. இதனால் அவர் கீழே விழுந்தார். தொடர்ந்து யானை தனது தந்தத்தால் செல்வராஜின் தொடையை குத்தி கிழித்து காயப்படுத்தியதுடன், காலால் மிதித்து தாக்கியுள்ளது. இதனால் வலி தாங்காமல் அலறிய செல்வராஜின் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடிவந்து, யானையை விரட்டினர். பின்னர் படுகாயம் அடைந்த செல்வராஜை மீட்டு சோலூர்மட்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சென்று படுகாயமடைந்த செல்வராஜுக்கு ஆறுதல் கூறினர். மேலும் வனவிலங்கு தாக்குதலால் காயம் அடைந்தவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகை வழங்க பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்