< Back
மாநில செய்திகள்
கொடுமுடி அருகே  சுவற்றில் கார் மோதியதில் தொழில் அதிபர் சாவு
ஈரோடு
மாநில செய்திகள்

கொடுமுடி அருகே சுவற்றில் கார் மோதியதில் தொழில் அதிபர் சாவு

தினத்தந்தி
|
25 Sept 2023 2:35 AM IST

கொடுமுடி அருகே சுவற்றில் கார் மோதியதில் தொழில் அதிபர் இறந்தாா்.

கொடுமுடி

கரூர் மாவட்டம் வெங்கமேடுவை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 59). இவர் சொந்தமாக கரூரில் ஜவுளி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். சம்பவத்தன்று சொந்த வேலை காரணமாக காரில் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார். கொடுமுடியை அடுத்த வெங்கம்பூர் ரெயில்வே கேட் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் இருந்த வீடு ஒன்றின் சுற்றுச்சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பழனிச்சாமி படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பழினிச்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்