< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
கோபி அருகே தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி
|10 Dec 2022 3:54 AM IST
கோபி அருகே தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலியானாா்.
கடத்தூர்
கோபி அருகே உள்ள பொலவகாளிபாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 49). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி அலமேலு. மூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மதுபோதையிலேயே பழையூருக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். அங்கு சென்று பாட்டப்ப மடை என்ற ஓடையில் அவர் நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது கால் தடுமாறி தண்ணீரில் விழுந்துவிட்டார். அவரால் எழுந்திரிக்க முடியாமல் தண்ணீரிலேயே கிடந்தால் அவர் மூச்சு திணறி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.இதுபற்றி தகவல் அறிந்ததும் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.