< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
கோபி அருகே மதுவிற்றவர் கைது
|8 Aug 2023 3:31 AM IST
கோபி அருகே மதுவிற்றவர் கைது செய்யப்பட்டாா்
கோபி அருகே உள்ள காமராஜ் நகர் பகுதியில் சிறுவலூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து, அவர் வைத்திருந்த ைபயை வாங்கி சோதனை செய்தனர். அதில் 6 மதுபாட்டில்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் பேரூர் செட்டிபாளையத்தை சேர்ந்த சோலை (வயது 41) என்பதும், அவர் அந்த பகுதியில் நின்றுகொண்டு சட்ட விரோதமாக மதுவிற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சோலையை கைது செய்து, அவரிடம் இருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.